search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழச்சி தங்கபாண்டியன்"

    தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல் வாரிசுகள் பலர் வெற்றிபெற்றுள்ளனர். அவர்கள் யார் என்பதை பார்ப்போம்...
    சென்னை:

    தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல் வாரிசுகள் பலர் வெற்றிபெற்றுள்ளனர்.

    தூத்துக்குடி தொகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி வெற்றிபெற்றார். அவர் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    மத்திய சென்னை தொகுதியில் முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் பா.ம.க. வேட்பாளர் சாம்பாலை விட 3 லட்சத்து 1520 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

    தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெயவர்தனைவிட 2 லட்சத்து 62 ஆயிரத்து 223 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

    வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை விட 4 லட்சத்து 60 ஆயிரத்து 691 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


    தேனி தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்தரநாத் குமார் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை விட 76 ஆயிரத்து 693 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

    ஆரணி தொகுதியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் அ.தி.மு.க. வேட்பாளர் ஏழுமலையை 2 லட்சத்து 30 ஆயிரத்து 806 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை விட 3 லட்சத்து 32 ஆயிரத்து 142 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி, தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை விட 3 லட்சத்து 99 ஆயிரத்து 919 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    தர்மபுரி தொகுதியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி தி.மு.க. வேட்பாளர் செந்தில் குமாரை விட 63 ஆயிரத்து 460 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.

    மதுரை தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசனை விட 1 லட்சத்து 39 ஆயிரத்து 395 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.

    திருநெல்வேலி தொகுதியில் சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பண்டியன் தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியத்தை விட 1 லட்சத்து 85 ஆயிரத்து 457 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரும் முன்னிலையில் உள்ளனர்.

    வடசென்னையில் டாக்டர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் உள்ளார். பா.ம.க. வேட்பாளர் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்தார்.

    மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் சாம்பால் குறைந்த ஓட்டுகள் வாங்கி பின் தங்கினார்.

    தென்சென்னை தொகுதியில் ஆரம்பத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் முன்னிலை வகித்தார். பின்னர் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவரை முந்தினார்.

    தற்போதைய நிலவரப்படி சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.
    தென்சென்னை தொகுதி தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். #LSPolls #UdhayanidhiStalin #ThamizhachiThangapandian
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். இந்தநிலையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை தொகுதி தேர்தல் அலுவலகத்தை, சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில், உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனும், எங்கள் குடும்பத்தினருடனும் 3 தலைமுறையாக கொண்டுள்ள நட்பு தமிழச்சி தங்கபாண்டியனுக்கு தேர்தலில் வெற்றியை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன். தி.மு.க. மீது கொள்கை பிடிப்பு கொண்ட ஒரு அழகான வேட்பாளரை உங்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு அனுப்ப தவறிவிடாதீர்கள். விரைவில் மத்திய மோடி ஆட்சியையும், மாநில எடப்பாடி பழனிசாமி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப உதயசூரியன் சின்னத்தை ஆதரிப்பீர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்காக சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இதில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, “பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேபோன்று, 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஒரு ஆட்சி மாற்றம் வரும் என்ற நம்பிக்கை தி.மு.க.வினருக்கு மட்டும் அல்ல பொதுமக்களிடமும் அந்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. தி.மு.க. வெற்றியின் கதாநாயகனாக தேர்தல் அறிக்கையும், தலைவர் மு.க.ஸ்டாலினும் இருப்பார்கள். வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக தி.மு.க. வேட்பாளர் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. அவர்களின் கடின உழைப்பு, கட்சி போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை மனதில் கொண்டு தான் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். பா.ஜனதா தலைவர்கள் பெயருக்கு முன்னால் ‘சவுகிதார்’ என்ற அடைமொழியை போட்டுக் கொண்டால் மட்டும் போதாது அதற்கு தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அடையாறில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அவருக்கு மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.  #LSPolls #UdhayanidhiStalin #ThamizhachiThangapandian
    ×